Home தேர்தல்-14 கோத்தா பாருவில் ஹூசாம் மூசா – கிளந்தான் பக்காத்தான் வேட்பாளர்களில் 6 மருத்துவர்கள்

கோத்தா பாருவில் ஹூசாம் மூசா – கிளந்தான் பக்காத்தான் வேட்பாளர்களில் 6 மருத்துவர்கள்

948
0
SHARE
Ad

கோத்தா பாரு – கிளந்தான் மாநில பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் தலைவரும் அமானா கட்சியின் தலைவர்களில் ஒருவருமான ஹூசாம் மூசா கோத்தா பாரு நாடாளுமன்றத்தில் போட்டியிடுகிறார்.

பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் தக்கியுடின் ஹசானை  எதிர்த்து களமிறங்கும் ஹூசாம் மூசா சாலோர் சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிடுகிறார். குபாங் கெரியான் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ்வரும் சட்டமன்றம் சாலோர் ஆகும்.

கடந்த பொதுத் தேர்தலில் பாஸ் கட்சியின் தக்கியுடின் 15,970 வாக்குகள் பெரும்பான்மையில் வென்ற கோத்தா பாரு தொகுதியில் இந்த முறை தேசிய முன்னணியும் போட்டியிடுவதால் மும்முனைப் போட்டி நிகழும்.

#TamilSchoolmychoice

கிளந்தானில் போட்டியிடும் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி வேட்பாளர்களில் 6 பேர் மருத்துவர்களாவர். “பொருளாதார ரீதியாகவும், நிதிநிலைமை ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நாடு நோய்வாய்ப்பட்டு கிடப்பதால் அதைத் தீர்க்க நாங்கள் மருத்துவர்களை வேட்பாளர்களாக நிறுத்துகிறோம்” என்றும் ஹூசாம் மூசா கூறியிருக்கிறார்.

பக்காத்தான் வேட்பாளர்கள் பட்டியல் நேற்று வியாழக்கிழமை இரவு கோத்தாபாருவில் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்புகளைத் தொடர்ந்து கிளந்தான் மாநிலத்திலுள்ள 14 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 45 சட்டமன்றத் தொகுதிகளிலும் பக்காத்தான், தேசிய முன்னணி, பாஸ் ஆகிய கட்சிகளுக்கிடையிலான மும்முனைப் போட்டிகள் நிகழும் என்பதால், 14-வது பொதுத் தேர்தலில் சுவாரசியமான அரசியல் முடிவுகளைத் தரப்போகும் மற்றொரு மாநிலமாக கிளந்தான் திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.