Home தேர்தல்-14 14-வது பொதுத்தேர்தலைக் கண்காணிக்க சுஹாகாமுக்கு அனுமதி மறுப்பு!

14-வது பொதுத்தேர்தலைக் கண்காணிக்க சுஹாகாமுக்கு அனுமதி மறுப்பு!

1007
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மே 9-ம் தேதி நடைபெறவிருக்கும் 14-வது பொதுத்தேர்தலில், தேர்தல் கண்காணிப்பாளராகச் செயல்பட அனுமதி வழங்கும் படி மலேசிய மனித உரிமை ஆணையமான சுஹாகாம் விடுத்த கோரிக்கையை, தேர்தல் ஆணையம் நிராகரித்தது.

இது குறித்து சுஹாகாம் இன்று வெள்ளிக்கிழமை விடுத்த அறிக்கையில், சுஹாகாம் உறுப்பினர் தேர்தல் மையங்களுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறாது.

“சுஹாகாமால் இந்த முடிவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. குறிப்பாக, தேர்தலின் போது அனைத்துலகக் கண்காணிப்பாளர்கள் தான் இருப்பார்கள் என எங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

சுஹாகாம் தன்னை ஒரு நேர்மையான இயக்கமாகக் கருதுகிறது மற்றும் மலேசியாவில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும், ஊக்குவிப்பதிலும் சட்டப்பூர்வ முக்கியத்துவத்தைப் பெறுவதில் இருந்து தான் தன்னை வலுப்படுத்திக் கொள்கிறது.

“சுதந்திரமான நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவது மிக முக்கியம். அதில் மனித உரிமையும் அடங்கியிருக்கிறது. எனவே தேர்தல் ஆணையம் அடிப்படை மனித உரிமைகளையும், கொள்கைகளையும் அங்கீகரித்து நேர்மையான தேர்தலை நடத்த வேண்டுமென சுஹாகாம் வலியுறுத்துகிறது” என்று சுஹாகாம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.

மேலும், தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கவில்லை என்றாலும் கூட, 14-வது பொதுத்தேர்தலில் தொடர்ந்து சுஹாகாமின் கண்காணிப்பு இருக்கும் என்றும், #ElectionsWithIntegrity #FreeandFairElections என்ற இரு டுவிட்டர் ஹேஷ்டேக்குகளைப் பின்தொடரும் படியும் மலேசியர்களை சுஹாகாம் கேட்டுக் கொண்டிருக்கிறது.