Home கலை உலகம் இணையத்தில் பெண் தேடுகிறார் நடிகர் ஆர்யா!

இணையத்தில் பெண் தேடுகிறார் நடிகர் ஆர்யா!

1165
0
SHARE
Ad

சென்னை – கடந்த சில நாட்களுக்கு முன், நடிகர் ஆர்யா, தனது திருமணம் குறித்து ஜிம்மில் பேசிக் கொண்டிருந்ததை காணொளியாகப் பதிவு செய்த அவரது நண்பர்கள், விளையாட்டாக இணையத்தில் கசிய விட்டனர்.

அது குறித்துப் பலரும் கேள்வி எழுப்பவே, தற்போது ஆர்யா தானாகவே ஒரு காணொளியை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

அதில், தான் தனது வாழ்க்கைத் துணையைத் தேடுவது உண்மை தான் என்றும், இதில் எந்த ஒரு விளையாட்டும் இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

விருப்பம் இருந்தால் 73301-73301 என்ற தொலைப்பேசி எண்ணிற்கு அழைக்கும் படியும் தெரிவித்திருக்கிறார்.

இதனை அறிந்த சக நடிகர்கள் அனைவரும் ஆர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.