Home நாடு தாய்லாந்திலிருந்து தப்பிய 20 கைதிகள் மலேசியாவில் புகுந்திருக்கின்றனரா?

தாய்லாந்திலிருந்து தப்பிய 20 கைதிகள் மலேசியாவில் புகுந்திருக்கின்றனரா?

910
0
SHARE
Ad

20Uighurescapesfromthaijailகோலாலம்பூர் – தாய்லாந்து சாடாவ், குடிநுழைவு தடுப்புக் காவலில் இருந்து தப்பிய 20 உய்குர் கைதிகள், மலேசியாவிற்குள் நுழைந்துள்ளதாகக் கூறப்படுவது குறித்து உறுதியானத் தகவல்கள் இன்னும் தெரியவில்லை என மலேசியா தெரிவித்திருக்கிறது.

இது குறித்து துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி கூறுகையில், “கைதிகள் தப்பித்திருப்பது குறித்து மலேசியாவிற்குத் தகவல்கள் கிடைத்தது. ஆனால் அவர்கள் மலேசியாவிற்குள் தான் நுழைந்திருக்கிறார்களா? என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. அப்படி அவர்கள் நுழைந்திருந்தால், அவர்களை எப்படி பிடிப்பது என்று மலேசிய அதிகாரிகளுக்குத் தெரியும்” என்று சாஹிட் தெரிவித்திருக்கிறார்.

கடந்த திங்கட்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணியளவில், சிறை அறையின் சுவரை ஓட்டைப் போட்டு 20 உய்குர்களும் தப்பித்திருக்கின்றனர்.