Home இந்தியா இரட்டை இலை சின்னம்: உச்சநீதிமன்றம் செல்கிறார் தினகரன்!

இரட்டை இலை சின்னம்: உச்சநீதிமன்றம் செல்கிறார் தினகரன்!

870
0
SHARE
Ad

dinakaran-ttv-feature-1சென்னை – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் இணைந்த அணிக்கு இந்தியத் தேர்தல் ஆணையம், இரட்டை இலை சின்னத்தையும், அதிமுக கட்சியை வழிநடத்துவதற்கான அதிகாரத்தையும் வழங்கியிருப்பதைத் தொடர்ந்து, இந்தத் தீர்ப்பை எதிர்த்து டிடிவி தினகரன் (படம்) உச்ச நீதிமன்றம் செல்கிறார்.

தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனக் கூறி வரும் டிடிவி தினகரன் அணியினர், இந்தத் தீர்ப்பு பாஜகவின் நெருக்குதலால் வழங்கப்பட்ட நியாயமற்ற தீர்ப்பு என சாடி வருகின்றனர்.

இதுவரையில் அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் எனத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டு வந்த தினகரன் இனி, தனித்து இயங்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

பெரும்பான்மை அடிப்படையில் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், இதனை சட்டரீதியாக எதிர்ப்பது கடினம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

எனினும், தங்களுக்கிருக்கும் சட்ட உரிமைகளின்படி, அடுத்த கட்ட நடவடிக்கையாக உச்ச நீதிமன்றத்திற்கு தினகரன் மேல்முறையீடு செய்யப் போவதாக அறிவித்திருக்கிறார்.