Home நாடு ‘பத்து’ நாடாளுமன்றத்தில் கெராக்கான் போட்டியிடும் – கோகிலன் உறுதி

‘பத்து’ நாடாளுமன்றத்தில் கெராக்கான் போட்டியிடும் – கோகிலன் உறுதி

1363
0
SHARE
Ad

Kohilan Pillaiகோலாலம்பூர் – கடந்த சில பொதுத் தேர்தல்களில் தொடர்ந்து கூட்டரசுப் பிரதேசத்திலுள்ள பத்து நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வந்திருக்கும் கெராக்கான் கட்சி இந்த முறையும் அந்தத் தொகுதியில் போட்டியிடுவது உறுதி என கெராக்கான் கட்சியின் உதவித் தலைவர் டத்தோ கோகிலன் பிள்ளை தெரிவித்தார்.

பத்து தொகுதியில் கோகிலன் கெராக்கான் கட்சியின் சார்பில் போட்டியிடுவார் என ஆரூடங்கள் கூறப்படுவது தொடர்பில் ‘செல்லியல்’ நேரடியாக கோகிலனைத் தொடர்பு கொண்டபோது அவர் இவ்வாறு கூறினார்.

“பத்து தொகுதியில் கெராக்கான் மீண்டும் போட்டியிடும். கட்சி சார்பாக அந்தத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்டு விட்டன. யார் போட்டியிடுவது என்பது குறித்து கெராக்கான் கட்சியின் தேசியத் தலைவர் மா சியூ கியோங் மற்றும் பிரதமர் நஜிப் இருவரும் இணந்து முடிவு செய்வர்” என்றும் கோகிலன் மேலும் கூறினார்.

#TamilSchoolmychoice

எனவே பத்து தொகுதியில் யார் போட்டியிடுவது என்பது குறித்து கட்சித் தலைமைத்துவமே முடிவு செய்யும் என்றும், தான் போட்டியிடுவது குறித்து இப்போதைக்கு கருத்து கூற விரும்பவில்லை என்றும் கோகிலன் செல்லியலிடம் தெரிவித்தார்.

எனினும் ஒரு பல இன கட்சி என்ற முறையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் கெராக்கான் கட்சி சார்பாக அதிகமான இந்தியர்களை நிறுத்த முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் கோகிலன் தெரிவித்தார்.