Home உலகம் இரட்டை கோபுரத் தாக்குதல்: 16 ஆண்டுகளுக்குப் பிறகு இழப்பீடு பெறும் உரிமையாளர்!

இரட்டை கோபுரத் தாக்குதல்: 16 ஆண்டுகளுக்குப் பிறகு இழப்பீடு பெறும் உரிமையாளர்!

916
0
SHARE
Ad

நியூயார்க் – அமெரிக்காவில் கடந்த 2001-ம் ஆண்டு நடந்த இரட்டை கோபுர தாக்குதல் தொடர்பான வழக்கில், கட்டிட உரிமையாளர் லேரி சில்வர்ஸ்டைன், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மற்றும் யுனைட்டட் ஏர்லைன்ஸ் என்ற இரு விமான நிறுவனங்களுக்கு எதிராகத் தொடுத்த வழக்கில் வெற்றியடைந்திருக்கிறார்.

அவ்விரு நிறுவனங்களும் 95.1 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீடு வழங்க ஒப்புக் கொண்டிருக்கிறது.

அதே போல், லேரி சில்வர்ஸ்டைன் அக்கட்டிடத்தின் காப்பீட்டு நிறுவனமும் பலக் கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 4.55 பில்லியன் அமெரிக்க டாலர் வழங்க ஒப்புக் கொண்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

கடந்த 2001-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 11-ம் தேதி, அல் கொய்தா தீவிரவாத அமைப்பு இரு விமானங்களின் மூலம் இரட்டை கோபுரத்தைத் தகர்த்தது.

இதில், கிட்டத்தட்ட 3,000 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.