Home அவசியம் படிக்க வேண்டியவை 9/11 தாக்குதலில் சவுதி மன்னரின் குடும்பத்திற்கு தொடர்பா?

9/11 தாக்குதலில் சவுதி மன்னரின் குடும்பத்திற்கு தொடர்பா?

952
0
SHARE
Ad

September 11 attackநியூயார்க், பிப்ரவரி 7 – கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ம் தேதி, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள இரட்டைக் கோபுரங்கள் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டது.

சுமார் 3000 பேர் பலியான இந்த சம்பவத்தில் சவுதி அரேபிய மன்னரின் குடும்பத்திற்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அல்-கொய்தாவால் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு மன்னர் குடும்பத்தின் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர்கள் நிதியுதவி அளித்ததாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு பிறகு அல்-கொய்தா மீது போர் தொடுத்த அமெரிக்கா, அந்த அமைப்பின் தலைவன் ஒசாமா பின்லேடன் உட்பட பல தீவிரவாதிகளை கொன்று குவித்தது. எனினும், இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஷகாரியாஸ் மொசாய் என்பவன் அமெரிக்க இராணுவத்தினாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். ஆயுள்தண்டனை பெற்றுள்ள அவன், இந்த தாக்குதலில் சவுதி அரேபிய மன்னரின் குடும்பத்திற்கு உள்ள தொடர்பு பற்றி தற்போது வாக்குமூலம் அளித்துள்ளான்.

#TamilSchoolmychoice

இதை சவுதிஅரேபிய அரசு திட்ட வட்டமாக மறுத்துள்ளது. இந்த விவகாரத்தில் சவுதி அரேபிய அரசுக்கோ, அதிகாரிகளுக்கோ, மன்னர் குடும்பத்துக்கோ எந்த வித தொடர்பும் இல்லை. அதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளது.