Home வணிகம்/தொழில் நுட்பம் இந்தோனிசிய நிறுவனத்துடன் புரோட்டோன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

இந்தோனிசிய நிறுவனத்துடன் புரோட்டோன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

651
0
SHARE
Ad

proton-logoசுபாங் ஜெயா, பிப்ரவரி 7 – இந்தோனிசியாவுக்காக புதிய ரக கார்களை உற்பத்தி செய்வது தொடர்பில் புரோட்டோன் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.

இது தொடர்பாக சுபாங் ஜெயாவில் உள்ள புரோட்டோன் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புரோட்டோன் ஹால்டிங்ஸ் மற்றும் இந்தோனிசியாவின் பிடி அடிபெர்காசா சிட்ரா லெஸ்டாரி நிறுவனங்களுக்கு இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

மலேசியத் தரப்பில் இந்தோனிசியாவுக்கான மலேசியத் தூதர் டத்தோஸ்ரீ ஸாரின் முகமட் ஹசிம் முன்னிலையில், புரோட்டோன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டத்தோ அப்துல் ஹாரித் அப்துல்லா, இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

#TamilSchoolmychoice

இதேபோல் மலேசியாவுக்கான இந்தோனிசிய தூதர் ஹெர்மன் பிரெயிட்னோ முன்னிலையில் பிடி அடிபெர்காசா சிட்ரா லெஸ்டாரி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அப்துல்லா மெஹ்முட் ஹென்ட்ரோபிரியோனா கையெழுத்திட்டார்.

இந்த நிகழ்வு மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், புரோட்டான் நிறுவனத் தலைவர் துன் மகாதீர் மற்றும் இந்தோனிசிய அதிபர் ஜோகோ விடோடோ முன்னிலையில் நடைபெற்றது.