Home இந்தியா ஜெயலலிதாவிற்கு மகள் பிறந்தது உண்மை தான் – உறவினர் தகவல்!

ஜெயலலிதாவிற்கு மகள் பிறந்தது உண்மை தான் – உறவினர் தகவல்!

1699
0
SHARE
Ad

Jayalalitha daughterபெங்களூர் – மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்று கூறி அம்ருதா என்ற பெண் கர்நாடக நீதிமன்றத்தில் மனு அளித்திருக்கிறார்.

ஜெயலலிதாவின் பெயருக்குக் களங்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்ற காரணத்திற்காக இத்தனை ஆண்டுகள் மறைத்து வளர்க்கப்பட்டதாகவும் அம்ருதா தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே, ஜெயலலிதாவின் அத்தை மகளான லலிதா என்பவர் பெங்களூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மை தான். எனது பெயரியம்மா ஜெயலஷ்மி தான் அவருக்கு பிரசவம் பார்த்தார். அதன் பின்னர் எனது உறவினர் சைலஜா தான் அக்குழந்தையை வளர்த்தார்” என்று தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

சைலஜாவால் வளர்க்கப்பட்ட அக்குழந்தை தான் இந்த அம்ருதா என்பது தனக்கு தெரியவந்ததாகவும் லலிதா குறிப்பிட்டிருக்கிறார்.