பெய்ஜிங் – தனக்கு எதிராக ஊழல் விசாரணை தொடங்கப்பட்டதால், சீன இராணுவத்தின் மூத்த அதிகாரியான ஜாங் யாங் தற்கொலை செய்து கொண்டதாக இன்று செவ்வாய்க்கிழமை சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
ஜாங் (வயது 66), சக்திவாய்ந்த மத்திய இராணுவ ஆணையத்தில் உறுப்பினராகச் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், இராணுவ இரகசியங்கள் வெளியானது தொடர்பாக அவருக்கு எதிராக விசாரணை நடத்த அரசாங்கம் உத்தரவிட்டது.
முதற்கட்ட விசாரணையில், ஜாங் மிக மோசமான ஒழுங்கியல் குற்றங்களைப் புரிந்திருப்பதாகவும், ஊழல் புரிந்திருப்பதாகவும் தெரிவந்தது.
இந்நிலையில், கடந்த நவம்பர் 23-ம் தேதி, பெய்ஜிங்கில் உள்ள தனது வீட்டில் ஜாங் தூக்கில் தொங்கித் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.