Home நாடு கார் பரிசு விழுந்ததாகக் கூறி முதியவரிடம் 10,000 ரிங்கிட் மோசடி!

கார் பரிசு விழுந்ததாகக் கூறி முதியவரிடம் 10,000 ரிங்கிட் மோசடி!

1036
0
SHARE
Ad

ONLINE SCAMகோலாலம்பூர் – நேற்று வெள்ளிக்கிழமை கிளானா ஜெயாவில் உள்ள பேரங்காடி ஒன்றில் பொருட்கள் வாங்கச் சென்ற 78 வயதான முதியவரிடம், கார் பரிசு விழுந்திருப்பதாகக் கூறி மர்ம நபர் ஒருவர் 10,000 ரிங்கிட் மோசடி செய்திருக்கிறார்.

நேற்று பேரங்காடியின் கார் நிறுத்துமிடத்தில் தனது காரை நிறுத்திவிட்டு இறங்கிய அவரிடம், நபர் ஒருவர் தான் அந்தப் பேரங்காடியின், ‘போட்டிப் பிரிவு இயக்குநர்’ என்று கூறி அறிமுகமாகியிருக்கிறார்.

பின்னர், கையில் துண்டுச்சீட்டு ஒன்றைக் கொடுத்து அம்முதியவருக்கு கார் பரிசு விழுந்திருக்கிறது என்றும், கிள்ளானில் உள்ள ஒரு கார் விற்பனை கடையில் அதனைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் நம்ப வைத்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

மேலும், சில ரொக்கப் பரிசுகளும் விழுந்திருப்பதாகக் கூறி, முதியவரின் கடன் அட்டை மற்றும் பற்று அட்டைகளின் இரகசிய எண்களைக் கேட்டுப் பெற்றிருக்கிறார். அதோடு, இரண்டு செல்பேசிகளையும் பெற்றிருக்கிறார்.

எல்லாம் முடிந்து அங்கிருந்து வெளியேறிய பின்னர் தான், ஏமாந்து போன விவரம் அம்முதியவருக்குத் தெரிய வந்திருக்கிறது.

வங்கியைச் சோதனையிட்டுப் பார்த்த முதியவருக்கு பெரிய அதிர்ச்சி காரணம் அதில் 10,000 ரிங்கிட் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார்.

தற்போது இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றது.