Home இந்தியா ஆர்.கே.நகர் : விஷால் போட்டி உறுதி!

ஆர்.கே.நகர் : விஷால் போட்டி உறுதி!

857
0
SHARE
Ad

vishalசென்னை – எதிர்வரும் டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறவிருக்கும் சென்னையிலுள்ள ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியின் இடைத் தேர்தலில் எதிர்பாராதவிதமான திருப்பமாக, நடிகர் விஷால் சுயேச்சை வேட்பாளராக போட்டியில் குதிக்கிறார்.

எதிர்வரும் திங்கட்கிழமை டிசம்பர் 4-ஆம் தேதி விஷால் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் விஷால் அரசியல் களத்தில் சுயேச்சை வேட்பாளராகக் குதித்திருப்பது, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருப்பதோடு, அரசியல் கட்சிகளுக்கிடையில் அதிர்வலைகளையும் தோற்றுவித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

விஷாலின் போட்டியால் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் முடிவுகள் எந்த அளவுக்கு பாதிப்படையும், முக்கிய அரசியல் கட்சிகளின் வாக்கு வங்கிகள் எந்த அளவுக்குப் பாதிப்படையும் என்பது போன்ற புதிய கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.