Home வணிகம்/தொழில் நுட்பம் குழந்தைகளுக்காக ஃபேஸ்புக் ‘மெசஞ்சர் கிட்ஸ்’ செயலி அறிமுகம்!

குழந்தைகளுக்காக ஃபேஸ்புக் ‘மெசஞ்சர் கிட்ஸ்’ செயலி அறிமுகம்!

977
0
SHARE
Ad

Messenger kidsஃபேஸ்புக் நிறுவனம் குழந்தைகளின் பயன்பாட்டிற்காக புதிய மெசஞ்சர் செயலியை (உள்தகவல் பெட்டி செயலி) உருவாக்கியிருக்கிறது.

‘மெசஞ்சர் கிட்ஸ்’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் அச்செயலி, தற்போது வயது வந்தோர் பயன்படுத்தும் மெசஞ்சர் செயலியைக் காட்டிலும் சற்று குறைவான வசதிகளைக் கொண்டது.

என்றாலும், இது முற்றிலும் 13 வயதிற்குக் குறைவான குழந்தைகள் பயன்படுத்தும் படியாக உருவாக்கப்பட்டிருப்பதால், பெற்றோர்களின் மேற்பார்வையில், செயல்படும்படியாக உள்ளது.

#TamilSchoolmychoice

இச்செயலியின் மூலம் குழந்தைகள் யாருடன் உரையாடலாம் என்பதை பெற்றோர் தீர்மானிக்க முடியும்.

இதன் மூலம், குழந்தைகள் பெற்றோர் தீர்மானித்திருப்பவர்களுக்கு புகைப்படங்கள், காணொளிகள் உள்ளிட்டவைகளை அனுப்ப முடியும்.

தற்போது ஐபோன், ஐபேடுகளில் இச்செயலியைப் பதிவிறக்கம் செய்ய முடியும் என்று ஃபேஸ்புக் தெரிவித்திருக்கிறது.