Home கலை உலகம் விஷாலுக்கு எதிராக சேரன் உள்ளிருப்புப் போராட்டம்!

விஷாலுக்கு எதிராக சேரன் உள்ளிருப்புப் போராட்டம்!

796
0
SHARE
Ad

Cheranசென்னை – வரும் டிசம்பர் 21-ம் தேதி நடைபெறவிருக்கும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், நடிகரும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால், சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுவதாக அறிவித்து நேற்று திங்கட்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினர்களில் ஒருவரான இயக்குநர் சேரன், விஷால் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவதை எதிர்த்து தயாரிப்பாளர் கவுன்சிலில் உள்ளிருப்புப் போராட்டத்தைத் துவங்கியிருக்கிறார்.

விஷாலுக்கு எதிராக சேரனுடன் ராதாரவி, ராதிகா உள்ளிட்ட தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

விஷால் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்து கொண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும் போட்டியிடுவது, தயாரிப்பாளர்களைக் கடுமையாகப் பாதிக்கும் என்றும் கூறும் சேரன், விஷால் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுத் தேர்தலில் போட்டியிடட்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

விஷால் ராஜினாமா செய்யும் வரை போராட்டம் தொடரும் என நேற்று திங்கட்கிழமை முதல் போராட்டம் நடத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.