Home கலை உலகம் 40-க்கும் மேற்பட்ட யுபிஎஸ்ஆர் மாணவர்களுக்கு லம்போர்கினி பயணம்!

40-க்கும் மேற்பட்ட யுபிஎஸ்ஆர் மாணவர்களுக்கு லம்போர்கினி பயணம்!

1128
0
SHARE
Ad

THR upsrstudentlamboகோலாலம்பூர் – அண்மையில் யு.பி.எஸ்.ஆர் தேர்வு எழுத்திய மாணவர்களுக்குத் தங்களுடைய வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவத்தை டி.எச்.ஆர் ராகா வானொலி நிலையம் ஏற்படுத்தி தந்திருக்கிறது.

அம்மாணவர்களின்  கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்கும் வகையில் லம்போர்கினி வாகனத்தில் பயணக்கும் வாய்ப்பை வழங்கியது.

சுமார் 30-க்கு மேற்பட்ட லம்போர்கினி வாகனத்தின் உரிமையாளர்கள் அம்மாணவர்களை ஏற்றி அஸ்ட்ரோ வளாகத்திலிருந்து சைபர் ஜெயா வரை 25 கிலோ மீட்டர் பயணத்தை மேற்கொண்டனர்.

#TamilSchoolmychoice

இது குறித்து டி.எச்.ஆர் ராகாவின் தலைவர், சுப்ரமணியம் வீரசாமி கூறுகையில், “இந்த மாணவர்கள் தங்களுடைய யு.பி.எஸ்.ஆர் தேர்வுக்காக மிகவும் கடுமையாக உழைத்துள்ளனர். அவர்களது சாதனைகளைப் பார்க்கும் பெருமையாக இருக்கிறது. எனவே, இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில் டி.எச்.ஆர் ராகா குழு இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருக்கிறோம். இந்த லம்போர்கினி வாகனத்தின் பயணம் அவர்களுக்கு மறக்க முடியாத ஒரு அனுபவமாக இருக்கும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

இப்பயணத்தில் டி.எச்.ஆர் ராகாவின் அறிவிப்பாளர்கள் உதயா, ரேவதி, அகிலா, சுரேஷ், கீதா, ஷாலு ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது..