Home உலகம் நியூயார்க் பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் – 5 பேர் காயம்

நியூயார்க் பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் – 5 பேர் காயம்

889
0
SHARE
Ad
usa-new york-attack-akayed-ullah-
நியூயார்க் பேருந்து நிலையத்தில் வெடிகுண்டுத் தாக்குதலை நடத்திய அகாயட் உல்லா…

நியூயார்க் – அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரின் டைம்ஸ் ஸ்குவேர் வளாகத்தின் அருகில் பயங்கரவாதி ஒருவன் சொந்தமாகத் தயாரிக்கப்பட்ட – உடலோடு இணைக்கப்பட்ட – நாட்டு வெடிகுண்டை நேற்று திங்கட்கிழமை இயக்கி வெடிக்கச் செய்ததில் 5 பேர் காயமடைந்தனர். அந்த இடமே களேபரமாக உருமாறியது.

நியூயார்க் நகரின் மிகவும் நெருக்கடியான மக்கள் நடமாட்டத்தைக் கொண்ட இந்தப் பகுதியில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இந்தத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதியும் காயமடைந்தான். உடனடியாக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டான். 27 வயதான அந்த நபர் அகாயட் உல்லா (Akayed Ullah) என அடையாளம் காணப்பட்டிருக்கிறான். இவன் ஒரு வாடகை வண்டிக்கான உரிமத்தையும் பெற்றிருக்கிறான்.

#TamilSchoolmychoice

வங்காளதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட இந்தத் தாக்குதல்காரன் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டிருக்கிறான் என்றும் அண்மையில் காசா பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாகத் தாக்குதல்காரன் தெரிவித்ததாகவும், புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.