Home நாடு ஜோகூர் சுல்தான் சாஹிட் சந்திப்பு!

ஜோகூர் சுல்தான் சாஹிட் சந்திப்பு!

1133
0
SHARE
Ad

Johor Sultanஜோகூர் பாரு – ஜோகூர் சுல்தான் சுல்தான் இப்ராகிம் அல்மாரும் சுல்தான் இஸ்கண்டார், நேற்று திங்கட்கிழமை துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடியை தனது இஸ்தானா பிளாங்கி அரண்மனையில் சந்தித்தார்.

நேற்று மதியம் சாஹிட் ஹமீடி அரண்மனைக்கு வந்ததாக சுல்தானின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கம் தகவல் வெளியிட்டிருக்கிறது.

இச்சந்திப்பில் ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் மற்றும் புக்கிட் அம்மான் சிறப்புப் பிரிவு இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது மொக்தார் முகமது ஷாரிப் ஆகியோர் உடனிருந்தனர்.

#TamilSchoolmychoice

மேலும், இச்சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்துக் கலந்தாலோசிக்கப்பட்டது.

(Pic: Sultan Ibrahim Almarhum Sultan Iskandar official Facebook)