Home வணிகம்/தொழில் நுட்பம் 1.47 பில்லியனுக்கு ஓல்டு டவுன் பங்குகளை டச்சு நிறுவனம் வாங்கியது!

1.47 பில்லியனுக்கு ஓல்டு டவுன் பங்குகளை டச்சு நிறுவனம் வாங்கியது!

1101
0
SHARE
Ad

Old Town Sdn Bhdகோலாலம்பூர் – டச்சு நிறுவனமான ஜேகப்ஸ் டாவே எக்பெர்ட்ஸ் ஆசியா எல் பிவி, பிரபல ஓல்ட் டவுன் பெர்ஹாட் நிறுவனத்தின் பங்குகளை மொத்தம் 1.47 பில்லியன் ரிங்கிட்டுக்கு அல்லது ஒரு பங்கு தலா 3.18 ரிங்கிட்டுக்கு வாங்கியிருக்கிறது.

ஜேடிஇ நிறுவனத்தின் சார்பில் இப்பங்குகளை வாங்கியிருக்கும் சிஐஎம்பி முதலீட்டு வங்கி, இது குறித்து கூறுகையில், தற்போது ஜேடிஇ வாங்கியிருக்கும் இப்பங்குகள் கடந்த டிசம்பர் 7-ம் தேதி விற்பனை செய்யப்பட்ட பங்கு தலா 2.88 ரிங்கிட் விலையைக் காட்டிலும் 10.4 விழுக்காடு அதிகம் எனத் தெரிவித்திருக்கிறது.

“கடந்த டிசம்பர் 11-ம் தேதி விலைப்படி மொத்தம் 463.239 மில்லியன் பங்குகளை தலா 3.18 ரிங்கிட் கொடுத்து (ஜேடிஇ) வாங்கியிருக்கிறது. அதன் மொத்த விலை 1.473 பில்லியன் ஆகும்” என்று சிஐஎம்பி தெரிவித்திருக்கிறது.