ரியாத் – சினிமாக்களுக்கு விதித்திருந்த தடையை அடுத்த ஆண்டு துவக்கத்தில் சவுதி அரேபியா நீக்குகிறது.
இது குறித்து அந்நாட்டின் கலாச்சார மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் அவ்வாத் பின் சாலே அலவாத் கூறுகையில், “தொழில் ஒழுங்குமுறை ஆணையம், ஆடியோவிசுவல் மீடியாவின் பொது ஆணையம் ஆகியவை சினிமா உரிமங்களை வழங்குவதற்கான செயல்முறைகளைத் தொடங்கியிருக்கிறது” என்று அறிவித்திருக்கிறார்.
2018-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் சினிமாக்கள் திறக்கப்படும் என்றும் அவ்வாத் குறிப்பிட்டிருக்கிறார்.
இஸ்லாமிய தீவிரவாதம் காரணமாக கடந்த 1980-ம் ஆண்டு சவுதி அரேபியா இத்தடையை விதித்தது குறிப்பிடத்தக்கது.