Home நாடு “விருதுகளுக்கு நான் தகுதியற்றவன்” – மகாதீர் விளக்கம்!

“விருதுகளுக்கு நான் தகுதியற்றவன்” – மகாதீர் விளக்கம்!

826
0
SHARE
Ad

Mahathir-Mohamad-கோலாலம்பூர் – துன் டாக்டர் மகாதீர் முகமது தனது இரு சிலாங்கூர் மாநில அரச விருதுகளைத் திரும்பக் கொடுத்தது குறித்து அளித்திருக்கும் விளக்கத்தில், தான் அந்த விருதுகளுக்குத் தகுதி இல்லாத காரணத்தால் அதனைத் திரும்பக் கொடுத்துவிட்டதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

“இந்த விருதைப் பெறுவதற்கு நான் தகுதியானவர் இல்லை என நினைக்கிறேன். நான் ஒரு கோபக்காரன், பாருங்கள் நான் எவ்வளவு கோபப்படுகிறேன் என்று? நான் உங்களை எரித்து விடுவேன். நான் எப்போதும் எரிப்பவன் தான்” என்று மகாதீர் தெரிவித்திருக்கிறார்.

மேலும், “எனக்குத் தகுதி இருப்பதாக நினைத்து சிலாங்கூர் சுல்தான் இந்த விருதுகளை அளித்திருக்கிறார். ஆனால் நான் மொத்த நாட்டிற்கும் நெருப்பு வைத்துவிடுவேன். அதனால் நான் இந்த விருதுகளுக்குத் தகுதி இல்லாதவன்” என மகாதீர் தெரிவித்திருக்கிறார்.