Home இந்தியா ராகுல் காந்தி கன்னியாகுமரி வருகை

ராகுல் காந்தி கன்னியாகுமரி வருகை

838
0
SHARE
Ad

ragulசென்னை – காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல் காந்தி, கன்னியாகுமரியைத் தாக்கிய ஓகி புயலினால் ஏற்பட்ட சேதங்களைப் பார்வையிட இன்று வியாழக்கிழமை அந்த மாவட்டத்திற்கு வருகை தருகிறார் என தமிழகக் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அறிவித்திருக்கிறார்.

ஓகி புயலின் தாக்கங்கள் ஒருபுறம் இருக்க கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் பலர் இன்னும் வீடு திரும்பவில்லை – காணவில்லை – என்றும் புகார்கள் எழுந்திருக்கும் நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் சோகமும் பதட்டமும் நிலவி வருகின்றது.

பல்வேறு முனைகளில் மக்கள் போராட்டங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து வருவதோடு, பல்வேறு தலைவர்களும் தொடர்ந்து அங்கு வருகை தந்து நிலவரங்களைப் பார்வையிட்டு வருகின்றனர்.

#TamilSchoolmychoice

நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கன்னியாகுமரி மாவட்ட நிலவரங்களை நேரில் ஆய்வு செய்தார்.