Home நாடு “அன்வாரை உடனடியாக விடுதலை செய்யுங்கள்” – மகாதீர் அறைகூவல்

“அன்வாரை உடனடியாக விடுதலை செய்யுங்கள்” – மகாதீர் அறைகூவல்

835
0
SHARE
Ad

mahathirகோலாலம்பூர் – எதிர்க் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் உடனடியாக சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட வேண்டும் என துன் மகாதீர் அறைகூவல் விடுத்திருக்கிறார்.

அமெரிக்காவின் மனித உரிமைகளுக்கான வழக்கறிஞர் கிம்பர்லி மொட்லி நேற்று புதன்கிழமை துன் மகாதீரைச் சந்தித்த பின்னர் இருவரும் இணைந்து கூட்டாக விடுத்த அறிக்கையில் மகாதீர் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

34 மாத சிறைவாசத்தை அன்வார் அனுபவித்து விட்டார் என்றும் கூறிய மகாதீர் அவருக்கு தற்போது முழுமையான தொடர்ந்த மருத்துவ கவனிப்பு தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இதில் முரண்பாடு என்னவென்றால், மகாதீர்தான் முதன் முறையாக 1997-இல் அன்வார் மீது ஓரினப் புணர்ச்சி குற்றச்சாட்டுகளை சுமத்தி சிறைக்கு அனுப்பியவர் ஆவார். அப்போது அன்வார் அம்னோவின் துணைத் தலைவராகவும், நாட்டின் துணைப் பிரதமராகவும் இருந்தார்.

அன்வார் தற்போது ஓர் அரசியல் கைதியாவார் என வர்ணித்த மகாதீர், எதிர்வரும் 2018 ஜூன் மாதம்தான் அன்வார் விடுதலை செய்யப்படுவார் என்றாலும் அவர் எதிர்நோக்கி வரும் உடல் நலப் பிரச்சனை உலகம் எங்கிலும் உள்ள அவரது ஆதரவாளர்கள், நண்பர்களுக்கு கவலை தருவதாக நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.