Home இந்தியா குஜராத் 2-ம் கட்டத் தேர்தல் துவங்கியது!

குஜராத் 2-ம் கட்டத் தேர்தல் துவங்கியது!

926
0
SHARE
Ad

Modi motherகாந்திநகர் – குஜராத் சட்டமன்றத் தேர்தல் 2017-ன் இரண்டாம் கட்டத் தேர்தல் இன்று வியாழக்கிழமை தொடங்கியது.

வடக்கு மற்றும் மத்திய குஜராத்திலுள்ள 14 மாவட்டங்களைச் சேர்ந்த 94 தொகுதிகளில் 851 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்தத் தேர்தல் குறித்து பாஜக சார்பில் பிரதமர் மோடியும், எதிர்கட்சியான காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியும் மிகப் பெரிய அளவிலான பிராச்சாரங்களை மேற்கொண்டனர்.

#TamilSchoolmychoice

குஜராத் குறித்து எதிர்கட்சியான காங்கிரஸ் கடும் பொய்களைச் சொல்லி வருகின்றது என நரேந்திர மோடி கூறினார்.

அதேவேளையில், ராகுல் காந்தி தனது பிரச்சாரத்தில் ஆளுங்கட்சியான பாஜகவுக்கு இந்தத் தேர்தல் பெரும் பின்னடைவாக இருக்கும் என்றும், காங்கிரஸ் நிச்சயம் வெற்றியடையும் என்றும் ஆரூடம் கூறினார்.

படம்: பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் வாக்களிக்க காந்திநகர் தொகுதி வாக்குச்சாவடிக்கு வருகிறார்.