Home உலகம் தாய்லாந்து விமான நிலையத்தில் தலைகீழாகத் தொங்கிய மர்மப் பெண்!

தாய்லாந்து விமான நிலையத்தில் தலைகீழாகத் தொங்கிய மர்மப் பெண்!

958
0
SHARE
Ad

Mysterywomanatthaiairportபேங்காக் – தாய்லாந்து பேங்காக் சுவர்ணபூமி விமான நிலையத்தில் நேற்று புதன்கிழமை மதியம் 20  முதல் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கூரையின் மேல் ஏறி தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்தது அங்கிருந்த பயணிகளை அதிர்ச்சியடையச் செய்தது.

உடனடியாக விமான நிலைய காவல்துறையினரும், மீட்புக் குழுவினரும் அங்கு வந்து அப்பெண்ணை மீட்கப் போராடினர்.

எனினும் அப்பெண் அங்கும் இங்குமாகத் தாவிக் கொண்டிருந்தார்.

#TamilSchoolmychoice

சுமார் 1 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மீட்புக் குழுவினர் விரித்து வைத்திருந்த மெத்தையில் அப்பெண் விழுந்தார்.

இதனையடுத்த உடனடியாக அவரை மீட்ட அதிகாரிகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.

அப்பெண்ணின் முதுகுப் பகுதியில் “ஒலிம்பிக் 2014” என்ற எழுத்துக்கள் பச்சை குத்தப்பட்டிருந்ததாகவும் தாய்லாந்து காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.