Home நாடு அன்வாரைச் சந்திக்க அனுமதி மறுப்பு: கேள்வி எழுப்பும் அமெரிக்க வழக்கறிஞர்!

அன்வாரைச் சந்திக்க அனுமதி மறுப்பு: கேள்வி எழுப்பும் அமெரிக்க வழக்கறிஞர்!

837
0
SHARE
Ad

kimberly-motleகோலாலம்பூர் – சுங்கை பூலோ சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமைச் சந்திக்கத் தனக்கு அனுமதி வழங்கப்படாதது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க வழக்கறிஞர் கிம்பெர்லி மோட்லி, துணை உள்துறை அமைச்சர் நூர் ஜஸ்லான் முகமதுவைச் சந்திக்கத் தயார் என அறிவித்திருக்கிறார்.

கடந்த செப்டம்பர் 7-ம் தேதி முதல் அன்வார் சார்பில் பிரதிநிதியாகச் செயல்பட்டு வரும் மனித உரிமை வழக்கறிஞரான மோட்லி இது குறித்து கூறுகையில், “துரதிருஷ்டவசமாக இதுவரையில் நூர் ஜஸ்லானுடன் ஒரு இனிமையான சந்திப்பை நடத்தவேயில்லை. மலேசிய சட்டத்திற்குட்பட்டு பணியாற்ற முயற்சி செய்து வருகின்றேன். மேலும், அவரைச் (நூர் ஜஸ்லான்) சந்தித்து அன்வாரைப் பார்வையிடுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்கவிருக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக, சுங்கை பூலோ சிறையில் அன்வாரைச் சந்திக்கத் தனக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடியை மோட்லி விமர்சித்தார்.

#TamilSchoolmychoice

இதனையடுத்து, மோட்லியை பதிலுக்கு விமர்சித்த, துணை உள்துறை அமைச்சரான நூர் ஜஸ்லான், மலேசிய சிறைக் கட்டுபாடுகளைக் கேள்வி கேட்கும் மோட்லியின் முறை மிகவும் முரட்டுத்தனமாகவும், திமிராகவும் இருப்பதாகக் குறிப்பிட்டார்.