Home இந்தியா மீண்டும் இரசிகர்களைச் சந்திக்கிறார் ரஜினி!

மீண்டும் இரசிகர்களைச் சந்திக்கிறார் ரஜினி!

802
0
SHARE
Ad

rajini kabaliசென்னை – அரசியல் போருக்குத் தயாராகுங்கள் என்று கூறிவிட்டு சில மாதங்களுக்கு அமைதியாகிவிட்ட நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் இரசிகர்களுடன் சந்திப்பு என்ற அதிரடி அஸ்திரத்தைப் பிரயோகித்துள்ளார்.

எதிர்வரும் டிசம்பர் 26 முதல் டிசம்பர் 31-ஆம் தேதிவரை காலை 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணிவரை, கோடம்பாக்கத்திலுள்ள ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் தனது இரசிகர்களை ரஜினிகாந்த் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதற்கான போலீஸ் பாதுகாப்புகளைக் கோரி, ரஜினி இரசிகர் மன்ற நிர்வாகிகள் காவல் துறைக்கு விண்ணப்பித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

நாள் ஒன்றுக்கு சுமார் ஆயிரம் இரசிகர்களைச் சந்தித்து அவர்களுடன் ரஜினி புகைப்படங்கள் எடுத்துக் கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சந்திப்பு நடைபெறும் காலகட்டத்தில் ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத் தேர்தலின் முடிவுகளும் வெளியாகிவிடும் என்பதாலும் – தமிழக அரசியலின் நடப்பு நிலவரம் அப்போது ஓரளவுக்கு தெளிந்த நிலையில் இருக்கும் என்பதாலும் – ரஜினியின் இரசிகர்கள் சந்திப்பு என்பதும், அதைத் தொடர்ந்த அறிவிப்புகளும் தமிழக அரசியல் களத்தின் அடுத்த பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.