Home நாடு ஐஜிபியின் துணைவியார் அசிசா ஹம்டி காலமானார்!

ஐஜிபியின் துணைவியார் அசிசா ஹம்டி காலமானார்!

1052
0
SHARE
Ad

IGP wifeகோலாலம்பூர் – தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ முகமது ஃபுசி ஹாருனின் துணைவியார் புவான்ஸ்ரீ அசிசா ஹம்டி (வயது 58) நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில், மலாயா மருத்துவ மையப் பல்கலைக்கழகத்தில் காலமானார்.

கடந்த 15 ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த அசிசா, நேற்று சிகிச்சைப் பலனின்றி காலமானதாகத் தகவல்கள் கூறுகின்றன.

கூட்டரசு காவல்துறை பெருநிறுவனத் தகவல் தொடர்புத் தலைவர் டத்தோ அஸ்மாவதி அகமது இத்தகவலை உறுதிப்படுத்தினார்.

#TamilSchoolmychoice

அசிசாவின் நல்லுடல் அவரது சொந்த ஊரான ஈப்போ, ராபாட் ஜெயாவிற்கு எடுத்துச் செல்லப்படும் முன் சிலாங்கூர் காவல்துறைத் தலைமையகத்தில் உள்ள மசூதியில் வைக்கப்படும் என்றும் அஸ்மாவதி தெரிவித்திருக்கிறார்.