Home இந்தியா காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றார் ராகுல்!

காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்றார் ராகுல்!

1287
0
SHARE
Ad

Rahul gandhiபுதுடெல்லி – அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக ராகுல் காந்தி இன்று சனிக்கிழமை பொறுப்பேற்றார்.

ராகுல் காந்தி, நேரு குடும்பத்திலிருந்து காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்கும் 6-வது நபராவார்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவராக ராகுல் பொறுப்பேற்றதை அங்கீகரித்து தேர்தல் ஆணையம் சான்றிதழையும் வழங்கியது.

#TamilSchoolmychoice

புதிய பொறுப்பேற்றிருக்கும் ராகுலுக்கு அவரது அன்னையும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

மேலும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் ராகுல் காந்திக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.