Home நாடு காவல் துறைத் தலைவரை இடைநீக்கம் செய்ய வேண்டும்!- சுவாராம்

காவல் துறைத் தலைவரை இடைநீக்கம் செய்ய வேண்டும்!- சுவாராம்

977
0
SHARE
Ad
ஐஜிபி முகமட் புசி ஹருண்

கோலாலம்பூர்: பாஸ்டர் கொ மற்றும் அமிர் சே மாட் காணாமல் போன விவகாரத்தில், காவல் படையின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள வேளையில், மலேசியக் காவல் துறைத் தலைவர் முகமட் புசி ஹருண் உடனடியாக பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என மனித உரிமைகள் அமைப்பான சுவாராம் கேட்டுக் கொண்டுள்ளது.   

இந்த விவகாரம் குறித்து புதிய விசாரணை ஒன்று, முகமட் புசியின் விலகலக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் என நேற்று வெள்ளிக்கிழமை பிரதமர் கூறியதற்கு இந்த அமைப்பு இக்கருத்தினை தெரிவித்துள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிட்ட சுவாராம் அமைப்பின் நிருவாக இயக்குனார், சிவன் துரைசாமி, குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் காவல் துறைத் தலைவர் மேலும், அப்பதவியில் இருப்பது சரியான ஒன்றாக இருக்காது எனத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இந்த விவகாரத்தில் காவல் துறை தோல்விக் கண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுக் கூறினார்.

இந்த சம்பவம் நடந்த போது, தற்போதைய காவல் துறைத் தலைவரான டான்ஶ்ரீ முகமட் புசி ஹாருன் காவல் துறை சிறப்பு பிரிவுக்கான தலைவராக இருந்ததது குறிப்பிடத்தக்கது. பாஸ்டர் ரேய்மண்ட் கொ மற்றும் அமிர் சே மாட் ஆகியோர் காணாமல் போனதற்கு காவல் துறை சிறப்பு பிரிவுதான் காரணம் என சுஹாகாம் கருத்துத் தெரிவித்திருந்தது. 2017 மற்றும் 2016- ஆம் ஆண்டுகளில் இவ்விரண்டு நபர்களும் காணாமல் போன நேரத்தில் காவல் துறை சிறப்பு பிரிவு மேலாளராக முகமட் புசி இருந்துள்ளார்வருகிற மே 4-ஆம் தேதி அன்று இவர் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.