Home நாடு “நாட்டை வழிநடத்த தெரியவில்லை என்றால் தேமுவிடம் ஒப்படைத்துவிடுங்கள்”- நஜிப்

“நாட்டை வழிநடத்த தெரியவில்லை என்றால் தேமுவிடம் ஒப்படைத்துவிடுங்கள்”- நஜிப்

1068
0
SHARE
Ad

ரந்தாவ்: நாட்டை சரியான முறையில் வழிநடத்தத் தெரியவில்லை என்றால், மீண்டும் தேசிய முன்னணியிடமே ஆட்சியை ஒப்படைத்து விடுங்கள் என முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் நேற்று வெள்ளிக்கிழமை மஇகா ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் உரையாற்றினார்.   

எல்லா விவகாரங்களிலும் மக்களை ஏமாற்றிய நம்பிக்கைக் கூட்டணி அரசை இனிமேலும் நம்ப வேண்டாம் என 500 பேர் கலந்துக் கொண்ட நிகழ்ச்சியில் நஜிப் தெரிவித்தார். இம்முறையாவது, நன்முறையில் சிந்தித்து செயல்படவும் வாக்காளர்களை நஜிப் கேட்டுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

எல்லா நேரங்களிலும் எங்களையே (தேசிய முன்னணி) குறைக் கூறுவது சரியான ஒன்றல்ல. அவர்களின் தவறுகளை மறைத்து தப்பித்துக் கொள்ள எங்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள்” என நஜிப் கூறினார்.

ஆட்சிக்கு வந்த 11 மாதங்களில் மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கக்கூடிய விசயங்கள் எத்தனை செய்திருப்பார்கள்?” என நஜிப் வினவினார்.

முட்டை, தக்காளி, அவரச உணவுகளான கேஎப்சி, மெக்டொனால்ட்ஸ் போன்றவற்றின் விலைகள் உயர்ந்துள்ளன” என அவர் சுட்டிக் காட்டினார்.

மேலும், ரந்தாவில் உள்ள வணிகர்களின் வருமானம் குறைந்துள்ளதையும் தாம் அவ்வப்போது கேள்விப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். முன்னர் 800 ரிங்கிட் வரையிலும் வருமானம் கிடைத்த இடத்தில், தற்போது வெறும் 200 ரிங்கிட் மட்டுமேகிடைப்பதாக அவர் குறிப்பிட்டார்.

எனது ஆட்சி காலத்தில் நாட்டின் கடன் 686 பில்லியன் ரிங்கிட் மட்டுமே இருந்தது. ஆனால், தற்போது, 777.1 பில்லினாக உயர்ந்துள்ளது” என நஜிப் குறிப்பிட்டுக் கூறினார்.

நாட்டின் சொத்துகளை விற்றும், நாட்டின் கடன் மென்மேலும் அதிகரித்துள்ளதை நஜிப் கேள்வி எழுப்பினார்.