ரந்தாவ்: 1எம்டிபி நிதியில் உழல் நடந்துள்ளதை நிரூபிப்பதற்கு அண்மையில் விற்கப்பட்ட, ஜோ லோவின் இக்குனாமிட்டி சொகுசுக் கப்பலே போதுமானது என நிதி அமைச்சர் லீம் குவான் எங் தெரிவித்துள்ளார்.
“உழல் நடந்திராமல் இருந்தால், நாம் எப்படி இந்தக் கப்பலை 126 மில்லியன் டாலருக்கு விற்றிருக்க முடியும்?” என கேள்வி எழுப்பினார்.
“இன்னும் நிறைய இது சம்பந்தமான சொத்துகள் கண்டறியப்படும். இதற்கான கால அவகாசம் தேவைப்படுகிறது” என அவர் குறிப்பிட்டார்.
1எம்டிபி பணத்திலிருந்து 250 மில்லியன் டாலர் பணத்தை, ஜோ லோ இந்த சொகுசுக் கப்பலை வாங்குவதற்காகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த புதனன்று , அரசாங்கத் தலைமை வழக்கறிஞர், டோமி தோமஸ், ஜோ லோவின் இந்த இக்குனாமிட்டியை கெந்திங் மலேசியா பெர்ஹாட் வாங்கிக் கொண்டதாகக் குறிப்பிட்டிருந்தார்.