
கோலாலம்பூர் – மலேசியாவுக்கான அமெரிக்கத் தூதர் கமலா ஷிரின் லக்டிர் கடந்த வெள்ளிக்கிழமை (15 டிசம்பர் 2017) கோலாலம்பூரிலுள்ள மலேசியக் காவல் துறையின் தலைமையகமான புக்கிட் அமான் மரியாதை நிமித்தம் வருகை ஒன்றை மேற்கொண்டார்.
அவரை காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ முகமட் பூசி ஹாருண் வரவேற்று, விளக்கங்கள் அளித்தார்.
