
கொழும்பு – ஞாயிற்றுக்கிழமை (17 டிசம்பர் 2017) முதல் இலங்கைக்கான வருகையைத் தொடங்கிய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், இலங்கைத் தலைநகர் கொழும்புவில் பல்வேறு சந்திப்புக் கூட்டங்களில் கலந்து கொண்டதோடு, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவுடன் பேச்சு வார்த்தைகளிலும் ஈடுபட்டார்.
மத்திய கிழக்கு நாடான பாஹ்ரினுக்கான அதிகாரபூர்வ வருகையை முடித்துக் கொண்டு நஜிப் ஞாயிற்றுக்கிழமை நேரடியாக கொழும்பு வந்தடைந்தார்.

நேற்று திங்கட்கிழமை நஜிப்புக்கு அதிகாரபூர்வ சிவப்புக் கம்பள வரவேற்பு இலங்கை நாடாளுமன்ற வளாகத்தில் வழங்கப்பட்டது. இந்த அதிகாரபூர்வ வரவேற்பு விழாவில் இலங்கை அதிபர் சிறிசேனாவும் கலந்து கொண்டார்.
பிரதமர் நஜிப்பின் இலங்கை வருகை தொடர்பிலான படக் காட்சிகளை இங்கே காணலாம்:



நஜிப்புக்கு வழங்கப்பட்ட மரியாதை அணிவகுப்புடன் கூடிய வரவேற்பு நிகழ்ச்சியில்….




படங்கள்: நன்றி – நஜிப் துன் ரசாக் டுவிட்டர் மற்றும் அகப்பக்கம்