Home கலை உலகம் ‘அருவி’ திரைப்படத்தால் மிகுந்த அதிருப்தியில் லஷ்மி!

‘அருவி’ திரைப்படத்தால் மிகுந்த அதிருப்தியில் லஷ்மி!

1156
0
SHARE
Ad

lakshmi-ramakrishnan45சென்னை – ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை கேலியும், கிண்டலும் செய்திருக்கும் ‘அருவி’ படத்தின் இயக்குநர் மீது அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் லஷ்மி இராமகிருஷ்ணன் மிகுந்த அதிரப்தியில் இருக்கிறார்.

இதற்கு முன் இரண்டு மூன்று திரைப்படங்கள் லஷ்மியின் உடல்மொழியையும், வசனங்களையும் தான் கிண்டல் செய்தன.

ஆனால், ‘அருவி’ அதையும் தாண்டி நிகழ்ச்சித் தொகுப்பாளரை மிகவும் கீழ்த்தரமாக சித்தரித்தது தான் லஷ்மியின் கோபத்திற்குக் காரணம் என்கின்றன சினிமா வட்டாரங்கள்.

#TamilSchoolmychoice

இதனை தனது டுவிட்டர் பக்கத்தின் வாயிலாக லஷ்மி நேரடியாகவே வெளிப்படுத்தி வருகின்றார்.

கேலியும், கிண்டலையும் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு பெண்ணை இப்படியா மோசமாகச் சித்தரிப்பது என்று லஷ்மியின் ஆதரவாளர்களும் ‘அருவி’ திரைப்படத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், ‘அருவி’ படத்தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தாங்கள் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் அவ்வாறு எடுக்கவில்லை என்றும், புண்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்திருக்கிறார்.