Home இந்தியா டி.மோகனுக்கு சென்னையில் பாராட்டு விழா! ரஜினி தொலைபேசியில் வாழ்த்து!

டி.மோகனுக்கு சென்னையில் பாராட்டு விழா! ரஜினி தொலைபேசியில் வாழ்த்து!

1996
0
SHARE
Ad
mohan-rajini-file pic-mifa
கடந்த முறை ரஜினியைச் சந்தித்தபோது அவருக்கு மிபா காற்பந்து சங்கத்தின் டி-சட்டையை நினைவாக டி.மோகன் வழங்கியபோது… (கோப்புப் படம்)

சென்னை – மஇகா தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.மோகன் அண்மையில்  மலேசிய நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தின் காங்கிரஸ் பிரமுகர் கராத்தே தியாகராஜன் ஏற்பாட்டில் சென்னையில் இன்று புதன்கிழமை (20 டிசம்பர் 2017)  பாராட்டு விழா நடைபெறுகிறது.

இன்று புதன்கிழமை மாலை 7.00 மணிக்கு சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள கிளாரியன் ஹோட்டல் பிரசிடண்ட் தங்கு விடுதியில் இந்தப் பாராட்டு விழா நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழகக் காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

rajini-mohan-t-mifa-file pic
ரஜினி-டி.மோகன் கோப்புப் படம்
#TamilSchoolmychoice

இந்தப் பாராட்டு விழா தொடர்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசி வழி தொடர்பு கொண்டு டி.மோகனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

மலேசிய இந்தியர் காற்பந்து சங்கத்தின் தலைவருமாகிய செனட்டர் டத்தோ மோகனுக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்தப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தான் மலேசியாவிற்கு வருகையளிக்கும் போது நேரில் சந்திப்பதாகவும் ரஜினி மோகனிடம் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த்தின் வாழ்த்துகளுக்கு டி.மோகன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

mohan-t-chennai felicitations-invitation