Home இந்தியா ஜெ’ சிகிச்சை காணொளி: வெற்றிவேல் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு!

ஜெ’ சிகிச்சை காணொளி: வெற்றிவேல் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு!

949
0
SHARE
Ad

tamil-nadu-state-election-commissionசென்னை – நாளை வியாழக்கிழமை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், டிடிவி தினகரன் ஆதரவாளரான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல், மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைப் பெறும் காணொளியை வெளியிட்டார்.

இந்நிலையில், ஒரு கட்சியின் தலைவராக இருந்தவரின் காணொளியை வெளியிட்டது ஒரு பிரச்சாரமாகவே கருதப்படும் என்றும், அதனை வெளியிட்ட வெற்றிவேல் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

மேலும், காணொளி வெளியிட்டது தொடர்பாக தினகரன் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.