Home நாடு பிரதமர் வேட்பாளர் தேர்வால் பக்காத்தான் தலைவர்களுக்குள் பிளவா?

பிரதமர் வேட்பாளர் தேர்வால் பக்காத்தான் தலைவர்களுக்குள் பிளவா?

1121
0
SHARE
Ad

pakatan-harapan_கோலாலம்பூர் – வரும் ஜனவரி 7-ம் தேதி நடைபெறவிருக்கும் மிகப் பெரிய மாநாட்டில், தமது பிரதமர் வேட்பாளரை பக்காத்தான் ஹராப்பான் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனினும், தற்போது இந்த விவகாரத்தில், பக்காத்தான் ஹராப்பான் தலைவர்களிடையே பிளவு ஏற்பட்டு பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருவதாக மலாய் மெயில் குறிப்பிட்டிருக்கிறது.

பக்காத்தான் ஹராப்பானில் சில தலைவர்கள், நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பிறகு பிரதமர் வேட்பாளரை அறிவிக்கலாம் என்றும், சில தலைவர்கள் இந்த மாநாட்டிலேயே அறிவிப்பது தான் சரியானது என்றும் வேறுபட்ட கருத்துகளைத் தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

எனினும், பக்காத்தான் ஹராப்பான் தலைமைத்துவம், மாநாடு தொடங்குவதற்கு முன்னதாகவே, பிரதமர் வேட்பாளரைத் தேர்ந்தெடுத்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கு வலியுறுத்தி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.