மென்லோ பார்க், கலிபோர்னியா – உலகை ஒன்றிணைக்கும் கனவு கொண்ட ஃபேஸ்புக் நிறுவனம், நட்பு ஊடகங்களை முறையாகப் பயன்படுத்தாவிட்டால் தீங்கு தான் என்பதை ஒப்புக் கொண்டிருக்கிறது.
நட்பு ஊடகங்களின் அசுரத் தனமான வளர்ச்சியால், மக்கள் ஒருவருக்கொருவர் நேரில் பார்த்துப் பேசிக் கொள்வதைக் கூட குறைத்துவிட்டதாக உலகெங்கிலும் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
குறிப்பாக, ஃபேஸ்புக் போன்ற நட்பு ஊடகங்களால், குடும்பம், நட்பு வட்டத்திற்குள் பிளவு ஏற்பட்டிருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
இந்நிலையில், அன்பானவர்களோடு நேரடியாக உரையாடுவதும், உறவாடுவதும் எப்போதும் நல்லது. அதைவிடுத்து எப்போதும் நட்பு ஊடகங்களில் மூழ்கிக்கிடப்பது உறவை மேலும் மோசமடையச் செய்யும் என ஃபேஸ்புக் ஆராய்ச்சி இயக்குநர் டேவிட் ஜின்ஸ்பெர்க் மற்றும் ஃபேஸ்புக்கின் மற்றொரு ஆராய்ச்சியாளர் மொரியா புர்கே ஆகியோர் தமது வலைப்பதிவில் தெரிவித்திருக்கின்றனர்.