Home கலை உலகம் மின்னலின் மண்ணின் நட்சத்திரம்: 2017-ம் ஆண்டு மலேசியத் திரைப்படங்கள் பற்றிய சுவாரசியச் சந்திப்புகள்!

மின்னலின் மண்ணின் நட்சத்திரம்: 2017-ம் ஆண்டு மலேசியத் திரைப்படங்கள் பற்றிய சுவாரசியச் சந்திப்புகள்!

1131
0
SHARE
Ad

Minnal Fmகோலாலம்பூர் – ஒவ்வொரு வாரமும் மின்னலின் சனிக்கிழமை காலை மணி 11 தொடக்கம் 1 மணி வரை மின்னலின் மண்ணின் நட்சத்திர நிகழ்ச்சி ஒலியேறி வருகிறது. மண்ணின் மைந்தர்களின் பாடல்கள், கலைஞர்கள் படைப்புகள், சந்திப்புகள் என பல சிறப்பு அம்சங்கள் நிகழ்ச்சியில் இடம்பெறும்.

அந்தவகையில், இன்று, 2017-ம் ஆம் ஆண்டில் வெளிவந்த மலேசிய திரைப்படங்களான “ஆர்.ஜ.பி” திரைப்படத்தின் இயக்குநர் எஸ். டி. பாலா, “ஆசான்” திரைப்படத்தின் இயக்குநர் எஸ்.டி புவனேந்திரன், “தோட்டம்: திரைப்படத்தின் இயக்குநர் அறங்காணல், “புதிய பயணம்” இயக்குநர் ரேவன், “மாமா மச்சான்” இயக்குநர் ஆர்.எம்.எஸ் சாரா, “வேட்டை கருப்பர் ஜயா” திரையின் இயக்குநர் அமிகோஸ் சுகு, “என் வீட்டு தோட்டத்தில்” திரைப்படத்தின் இயக்குநர் கார்த்திக் ஷாமாளன், “வசந்த விலாஸ்” திரைப்படத்தின் இயக்குனர் ரோய், “ஜாங்கிரி” இயக்குனர் கபிலன் ஆகியோரின் சந்திப்பை நேயர்கள் கேட்கலாம்.

இவ்வருடத்தின் சிறந்த பத்து பாடல்களை அறிவிப்பாளர் ரவின் நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கவுள்ளார். இதயங்களை வருடும் இனிய பாடல்களோடு, கலைஞர்கள் நேயர்களின் சந்திப்போடு மண்ணின் நட்சத்திரம் இன்று இடம்பெறும்.

#TamilSchoolmychoice

அதே வேளையில், இளைஞர்களை கவரும் வகையில் மின்னலின் மண்ணின் நட்சத்திர டப்மாஷ்  (dubsmash / musically) போட்டி எட்டாவது வாரமாக இடம்பெறவுள்ளது. இந்த வாரம் 200 ரிங்கிட்டை வெல்லப் போவது யார்? என்பது மண்ணின் நட்சத்திர நிகழ்ச்சியின் முடிவில் தெரிய வரும். உள்ளுர் கலைஞர்களின் பாடல்கள் அல்லது மலேசிய திரைப்படத்தின் காட்சிகளை கொண்டு டப்மாஷ்  (dubsmash / musically) காணொளி 1 நிமிடத்திற்குள் செய்ய வேண்டும்.

இதில் யார் வெல்ல போகிறார் என்பது நேயர்களின் கைகளில் இருக்கிறது. காரணம், இப்போட்டிக்கு நேயர்கள் தான் நீதிபதி. யாருடைய காணொளிக்கு அதிகம் லைக்ஸ் கிடைக்கிறதோ அவரே வெற்றியாளர். அதோடு, இந்த ஆண்டில் கலைஞர்களுக்கு கிடைத்த வெற்றி அனுபவங்களையும் தாங்கி மலர்கிறது மின்னலின் மண்ணின் நட்சத்திரம். கலையுலக செய்திகள் குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்ள, இந்நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் பிரேமா கிருஷ்ணனை 03-22887497 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.