அம்மூன்று கொள்ளையர்களும் கிள்ளான் மற்றும் நெகிரி செம்பிலானில் நடந்த பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் என காவல்துறை அறிக்கை கூறுகின்றது.
கொள்ளையர்கள் சென்ற காரை நிறுத்த காவல்துறை எவ்வளவோ முயற்சி செய்து அவர்களைச் சரணடையச் சொல்லி எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் சரணடையவில்லை என்றும், காவல்துறையினரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டதால், அதிகாரிகள் திருப்பிச் சுட்டதாகவும் சிலாங்கூர் சிஐடி தலைவர் எஏசி ஃபாட்சில் அகமட் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Comments