Home கலை உலகம் நயன்தாராவை எனக்கு ரொம்ப பிடிக்கும்- ஆர்யா

நயன்தாராவை எனக்கு ரொம்ப பிடிக்கும்- ஆர்யா

606
0
SHARE
Ad

nayanthara-and-aryaசென்னை, மார்ச் 26- நயன்தாராவும், ஆர்யாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவியுள்ளன. இருவரும் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் இணைந்து நடித்தார்கள். தற்போது ‘ராஜா ராணி’ படத்திலும் சேர்ந்து நடிக்கிறார்கள்.

நயன்தாரா காதல் முறிந்து மீண்டும் நடிக்க வந்ததும் அவரை ஆர்யா தனது வீட்டுக்கு அழைத்து பிரியாணி விருந்து கொடுத்தார். இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு உள்ளதாகவும் செய்தி பரவி உள்ளது. இதற்கு ஆர்யா பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-

நயன்தாராவையும் என்னையும் இணைத்து அடிக்கடி செய்திகள் வருகின்றன. நயன்தாராவே இதுபற்றி என்னிடம் கேட்டார். நான் என்ன செய்ய முடியும். நயன்தாராவை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். நாங்கள் நல்ல நண்பர்கள். எத்தனையோ நடிகைகளுடன் எனக்கு பழக்கம் உள்ளது. அவர்களில் எனக்கு மிகவும் பிடித்தமானவர் நயன்தாரா.

#TamilSchoolmychoice

நயன்தாராவிடம் எல்லா விஷயங்களையும் மனம் விட்டு பேசலாம் மற்றவர்களுக்கு உதவி செய்யும் குணம் எனக்கும் அவருக்கும் இருக்கிறது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை சொல்ல முடியாது. இப்போது வரை நானும் நயன்தாராவும் நெருங்கிய நண்பர்களாக இருக்கிறோம். எனக்கு காதல் திருமணம்தான் நடக்கும். அதில் சந்தேகம் இல்லை.  இவ்வாறு ஆர்யா கூறினார்.