Home கலை உலகம் பிரியங்கா சோப்ரா எனக்கு இசையமைக்கும் வாய்ப்பினைத் தரவேண்டும்- ஏ.ஆர்.ரஹ்மான் புகழாரம்

பிரியங்கா சோப்ரா எனக்கு இசையமைக்கும் வாய்ப்பினைத் தரவேண்டும்- ஏ.ஆர்.ரஹ்மான் புகழாரம்

620
0
SHARE
Ad

rahman

மும்பை, மார்ச் 25- சமீபத்தில் மும்பையில் இந்தி வீடியோ விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் ஏ.ஆர்.ரஹ்மானின் ‘இன்பினெட் லவ்’ என்ற ஆல்பத்திற்கு விருது கிடைத்தது.

#TamilSchoolmychoice

விருதினை இந்தி சினிமா நடிகையும், பாடகியுமான பிரியங்கா சோப்ரா வழங்கினார். இசை உலகில் சிறந்து விளங்குவதற்காக பிரியங்கா சோப்ராவிற்கும் விருது தரப்பட்டது.

பின்னர், பிரியங்கா சோப்ராவிற்கு வாய்ப்பு கொடுப்பீர்களா என்று ரஹ்மானிடம் நிருபர்கள் கேட்டபோது, ‘அவர் எனக்கு ஒரு வாய்ப்பு தரவேண்டும்‘ என்று கூறினார்.

2008ஆம் ஆண்டு தனது இசை அமைப்பிற்காக ஆஸ்கார் விருதினைப் பெற்றவரும், தற்காலத்திய இசை அமைப்பாளர்களில் சிறந்த புகழுடன் விளங்குபவருமான, ரஹ்மான் ஒரு பாடகியைப் புகழ்ந்து பேசியது அவரது உயரிய குணத்தைக் காட்டுவதாக அமைகிறது.