Home கலை உலகம் மின்னல் ஏற்பாட்டில் டாக்டர் காதர் இப்ராஹிமின் ‘நெஞ்சே எழு’

மின்னல் ஏற்பாட்டில் டாக்டர் காதர் இப்ராஹிமின் ‘நெஞ்சே எழு’

1216
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மின்னல் எஃப்எம், 2018-ம் ஆண்டிற்கான முதல் நிகழ்ச்சியைத் தன்முனைப்போடு தொடங்குகிறது.

பேராசிரியர் டாக்டர் காதர் இப்ராஹிம் கலந்து கொள்ளும் ‘நெஞ்சே எழு’ நிகழ்ச்சி, வரும் 13 -ம் தேதி சனிக்கிழமை இரவு மணி 7.30 மணிக்கு அங்காசாபூரி ஆடிட்டோரியம் பி ரம்லியில் நடைபெறவிருக்கிறது.

Nenje Ezhuநுழைவு முற்றிலும் இலவசமான இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு மின்னல் எஃப்எம் தமது நேயர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

#TamilSchoolmychoice

வாழ்க்கை பல அனுபவங்களை நமக்கு கற்றுக் கொடுக்கிறது, அதிலிருந்து மீண்டு வருகிறோமா? அல்லது வீழ்ந்து போகிறோமா? உங்கள் சிந்தனைகளை தட்டி எழுப்ப மின்னல் எஃப்எம் ஏற்பாட்டில் வருகிறது ‘நெஞ்சே எழு’! மறவாமல் கலந்து கொள்ளுங்கள்!