Home உலகம் போதைப் பொருள் கடத்தல்: மலேசியரைச் சுட்டுக் கொன்றது இந்தோனிசியப் போலீஸ்!

போதைப் பொருள் கடத்தல்: மலேசியரைச் சுட்டுக் கொன்றது இந்தோனிசியப் போலீஸ்!

862
0
SHARE
Ad

War-on-Drug-9-16-11-3மேடான் – போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட 57 வயதான மலேசியர் ஒருவரை மேடானில் இன்று திங்கட்கிழமை இந்தோனிசியக் காவல்துறை சுட்டுக் கொன்றது.

“வடக்கு சுமத்ரா காவல்துறைத் தலைவர் பாலுஸ் வாடர்பாவ் கூறுகையில், சின் யூ ஃபா என அடையாளம் காணப்பட்டிருக்கும் மலேசியர், மேடானில் சமையல்காரராக பணியாற்றி வந்திருக்கிறார்.”

“சந்தேகத்திற்குரிய அந்நபர் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டிருக்கிறார். அவரைக் கைது செய்யச் சென்ற போது தப்பிக்க முயற்சி செய்ததால், தற்காப்பிற்காக காவல்துறையினர் அவரைச் சுட்டுக் கொன்றனர்” என இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பாலுஸ் தெரிவித்திருக்கிறார் என டிரிபுன் செய்தி வெளியிட்டிருக்கிறது.