Home நாடு பிரதமராக மகாதீர்: அண்ணன் ஆதரவு! தங்கையோ எதிர்ப்பு

பிரதமராக மகாதீர்: அண்ணன் ஆதரவு! தங்கையோ எதிர்ப்பு

859
0
SHARE
Ad
Gobind Singh 440 x 215
கோபிந்த் சிங் டியோ

ஜோர்ஜ் டவுன் – பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக துன் மகாதீர் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுமையிலும் ஆதரவும் எதிர்ப்புமாக குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் மறைந்த கர்ப்பால் சிங்கின் மகள் சங்கீத் கவுர் (படம்)  மகாதீரின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். “எனது தந்தை உயிரோடு இருந்தால் இதற்கு ஒப்புக் கொண்டிருக்க மாட்டார். கூட்டணி வெற்றி பெற்று மகாதீர் பிரதமரானால், அதன்மூலம் ‘மகாதீரின் பழைய சித்தாந்தங்கள்’ மீண்டும் அமுலுக்கு வரும் என்ற அச்சத்தையும் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

Sangeet Kaur Deo
சங்கீத் கவுர்

ஆனால், அவரது மூத்த சகோதரர் கோபிந்த் சிங் டியோ, மகாதீர் ஏன் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என்ற நியாயத்தையும் அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

#TamilSchoolmychoice

கோபிந்த், சங்கீத் இருவருமே ஜசெக கட்சியில் பணியாற்றுபவர்கள். கட்சியின் துணைத் தலைவராக கோபிந்த் செயலாற்றுகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (7 ஜனவரி 2018) நடைபெற்ற பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் கூட்டத்தில் உரையாற்றிய கோபிந்த் சிங், பக்காத்தான் ஆட்சிக்கு வந்தால் முதல் கட்டமாக அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் மறுசீரமைப்பு செய்யப்படும் என அறிவித்தார்.

மூத்த சகோதரனுக்கும் தங்கைக்கும் இடையில் இந்த முக்கிய விவகாரத்தில் கருத்து வேறுபாடுகள் இருப்பினும், அது இயல்பானது, ஆரோக்கியமானது என்றும் வரவேற்கப்பட வேண்டியது என்றும் ஜசெக வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாக மலேசியாகினியின் செய்தி ஒன்று குறிப்பிட்டிருக்கிறது.

மாற்று கருத்துகள் பதிவு செய்யப்பட வேண்டியது வரவேற்கப்பட வேண்டும் என்றும், ஒரே குடும்பத்தில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் இருப்பது அதிசயமல்ல என்றும் ஜசெக வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.

கர்ப்பாலின் மற்றொரு மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராம்கர்ப்பால் சிங்கும் தனது சகோதரி சங்கீத் கவுர் தனது கருத்துகளைப் பதிவு செய்ய வாய்ப்பளிக்கப்பட வேண்டும், அதில் தவறில்லை என்று கூறியிருக்கிறார்.

ஒரே கட்சியில் இருக்கும் குடும்பத்தினர் இருவருக்குள் கருத்து வேறுபாடுகள் எழுவது அதிசயமல்ல.

shahrir-khalid-samad
அரசியல் சகோதரர்கள் – அமானா கட்சியின் காலிட் சமாட் – அம்னோவின் ஷாரிர் சமாட்

மலேசிய அரசியலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எதிரும் புதிருமாக செயல்படுவதற்கு பல உதாரணங்கள் உண்டு.

ஜோகூர் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் டான்ஸ்ரீ ஷாரிர் சமாட் தொடக்கம் முதல் அம்னோவின் தீவிர உறுப்பினராகச் செயல்பட்டு வர, அவரது இளைய சகோதரர் காலிட் சமாட் பாஸ் கட்சியில் இணைந்து ஷா ஆலாம் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டு வந்தார். தற்போது அமானா கட்சியில் இணைந்து அரசியல் பணியாற்றுகிறார்.