Home நாடு ஆசியாவில் சக்திவாய்ந்த கடப்பிதழ்களில் மலேசியா 4-வது இடம்!

ஆசியாவில் சக்திவாய்ந்த கடப்பிதழ்களில் மலேசியா 4-வது இடம்!

951
0
SHARE
Ad

malaysian-passportகோலாலம்பூர் – ஆசியாவைச் சேர்ந்த சக்திவாய்ந்த கடப்பிதழ்களின் பட்டியலில், மலேசியா 4-வது இடத்தில் இருக்கின்றது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த நிலையை மலேசியா தக்க வைத்திருக்கிறது.

‘தி ஹென்லி பாஸ்போர்ட் இண்டெக்ஸ்’ என்ற நிறுவனம் இந்தக் கடப்பிதழ் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

மலேசியக் கடப்பிதழ் மூலம் 166 நாடுகளுக்கு விசா இன்றி செல்லலாம் என்றும் அந்நிறுவனம் கூறுகின்றது.

மேலும், உலக அளவில் சக்திவாய்ந்த கடப்பிதழில் மலேசியா 12-வது இடத்தில் இருக்கின்றது என்றும் ‘தி ஹென்லி பாஸ்போர்ட் இண்டெக்ஸ்’ கூறுகின்றது.