Home கலை உலகம் நட்சத்திர விழா 2018: அதிருப்தியில் மூத்த நடிகர்கள்! கொண்டாடிய வாரிசுகள்!

நட்சத்திர விழா 2018: அதிருப்தியில் மூத்த நடிகர்கள்! கொண்டாடிய வாரிசுகள்!

1579
0
SHARE
Ad

Natchathiravizha2018சென்னை – ‘நட்சத்திர விழா 2018’ மலேசியாவில் பிரம்மாண்டமான முறையில் கடந்த ஜனவரி 6-ம் தேதி நடைபெற்றது.

இதில் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல் உட்பட சுமார் 300-க்கும் மேற்பட்ட தமிழகக் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

என்றாலும், சில கலைஞர்களுக்கு இதில் அதிருப்தி தான் என்கிறது தமிழக சினிமா வட்டாரங்கள்.

#TamilSchoolmychoice

அவர்களில் நடிகை ராதிகாவும், நடிகர் எஸ்.வி.சேகரும் வெளிப்படையாகவே தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

தனக்கும், கணவர் சரத்குமாருக்கும் அழைப்பே விடுக்கவில்லை என ராதிகா குற்றம் சாட்டினார்.

அதேவேளையில், நகைச்சுவை நடிகர் எஸ்.வி.சேகர், விஜயகாந்த் தலைவராக இருந்த போது, அவர் ஏற்பாடு செய்திருந்த மலேசியா, சிங்கப்பூர் கலை நிகழ்ச்சியில், கலைஞர்கள் ஒருவர் கூட விடாமல் அனைவரையும் மிக மரியாதையாக நடத்தியதாகத் தனது டுவிட்டரில் குறை கூறியிருந்தார்.

அதுமட்டுமின்றி, நட்சத்திரக் கலைவிழா 2018-ல், கலைஞர்கள் பலருக்கு தகுந்த மரியாதை வழங்கப்படவில்லை எனக் கூறி நடிகர்சங்கத்தில் தனது அறக்காப்பாளர் பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார்.

இப்படியிருக்க, சரத்குமார் மகளான வரலஷ்மி சரத்குமாரும், எஸ்.வி.சேகரின் மகன் அஷ்வினும் இவ்விழாவில் பங்கேற்றனர்.

வரலஷ்மி சரத்குமார் ரஜினியுடன் தான் எடுத்துக் கொண்ட படத்தை தனது இண்ஸ்டாகிராமில் பதிவு செய்து, “தலைவா” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.