Home நாடு அன்வாரைச் சந்திக்க மகாதீருக்கு அனுமதி மறுப்பு!

அன்வாரைச் சந்திக்க மகாதீருக்கு அனுமதி மறுப்பு!

965
0
SHARE
Ad

Mahathirகோலாலம்பூர் – பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது, ‘செராஸ் ரிஹேபிலிடேஷன் ஹாஸ்பிட்டல்’ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை இன்று புதன்கிழமை சந்திப்பதாய் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து இன்று பிற்பகல் அன்வாரின் மகளும், பிகேஆர் உதவித் தலைவருமான நூருல் இசாவுடன், ‘செராஸ் ரிஹேபிலிடேஷன் ஹாஸ்பிட்டல்’ மருத்துவமனைக்குச் சென்ற மகாதீரை, அங்கு காவலுக்கு இருந்த சிறை அதிகாரிகள் அனுமதிக்க மறுத்தனர்.

சந்திப்புக்கான அனுமதி மறுப்பு உத்தரவு, உள்துறை அமைச்சிலிருந்து வந்திருப்பதாக சிறை அதிகாரிகள், மகாதீரிடம் தெரிவித்திருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மகாதீர், “எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. நான் அவரை (அன்வார்) சந்திக்க வேண்டும். என்னை வேட்பாளராக (பிரதமர் வேட்பாளராக) தேர்ந்தெடுத்ததற்கு மறுப்புக் கூறாமல் ஏற்றுக் கொண்டதற்கு நன்றி தெரிவிக்க வேண்டும்” என மகாதீர் தெரிவித்தார்.

கடந்த நவம்பரில் தோள்பட்டையில் அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட அன்வார் ‘செராஸ் ரிஹேபிலிடேஷன் ஹாஸ்பிட்டல்’ என்ற மருத்துவமனையில் தங்கியிருந்து தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.