Home நாடு சோடாவுக்கு வரியா? – சுகாதார அமைச்சு மறுப்பு!

சோடாவுக்கு வரியா? – சுகாதார அமைச்சு மறுப்பு!

776
0
SHARE
Ad

sugary-drinksகோலாலம்பூர் – தொற்று அல்லாத நோய்களைக் கட்டுப்படுத்த, குளிர்பானங்களுக்கு வரி விதிக்கப்படவிருப்பதாகக் கூறப்படும் தகவலை மலேசிய சுகாதார அமைச்ச்சு மறுத்திருக்கிறது.

“நாங்கள் அது பற்றி விவாதிக்கவில்லை. அதனை நடைமுறைப்படுத்தும் திட்டமும் இல்லை” என சுகாதாரத்துறை பொது இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிசாம் அப்துல்லா கூறியிருப்பதாக மலாய் மெயில் தெரிவிக்கின்றது.

இது குறித்து கடந்த மாதம் என்எஸ்டி வெளியிட்ட செய்தியில், தொற்று அல்லாத நோய்கள் குறிப்பாக உயர் இரத்த அழுத்தம், இனிப்பு நீர் மற்றும் இருதயக் கோளாறுகள் போன்ற நோய்கள் காரணமாக, மலேசியாவில் 73 விழுக்காடு மரணங்கள் நிகழ்கின்றன என்றும், அதனைக் கட்டுப்படுத்த கூட்டரசு அரசாங்கம் சில கொள்கைகளைக் கொண்டு வரவிருப்பதாகவும் தெரிவித்திருந்தது.

#TamilSchoolmychoice

மேலும், இந்தத் தொற்று அல்லாத நோய்கள், புகைபிடிப்பது, ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் போதுமான உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது போன்ற மோசமான வாழ்க்கை முறை காரணமாகவும் தாக்குகின்றன.

இதனையடுத்து, அரசாங்கத்தின் புதிய கொள்கைகளில் குளிர்பானங்களில் கலக்கப்படும் சோடாவுக்கு வரி விரிப்பது, உணவகங்களில் விற்பனை நேரத்தை நள்ளிரவு வரை கட்டுப்படுத்துவது போன்ற திட்டங்களையும் அரசாங்கம் நடைமுறைப்படுத்த முயற்சி செய்து வருவதாகவும் அறிக்கைகள் தெரிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.